கந்தசஷ்டி உற்சவத்தின் ஜந்தாம் நாள் காலை உற்சவம்

இன்று காலை 10.00மணிக்கு சுற்றுப்பூஜைகள் இடம்பெற்று  தொடர்ந்து காலை 10.15 மணிக்கு விசேட வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகியது.  அடியார்களி்ன் அரோகரா மற்றும் காண்டாமணியின் கணீர் என்ற ஓலியுடன் மேல வாத்தியங்கள் முழங்க எங்கள் பாலமுருகன் அழகிய பிரமாண்டமான  புத்தம் புதிய தாமரை பீடத்தில் கம்பீரமாக காட்சி தந்தார். தொடர்ந்து  தீபாராதனைகள் இடம்பெற்று எம்பெருமான் உள்வீதி எழுந்தருளினார். இன்று விடுமுறை என்பதால் அடியார் கூட்டம் அதிகமாக இருந்தது. அடியார்களிற்கு மத்தியில் எம்பெருமான் மிதந்து வந்து அருட்காட்சி கொடுத்தார். அந்த காட்சியை காண உண்மையில் ஆயிரம் கண்கள் கூட போதாது எனலாம். அத்துடன் ஆலய தென்கிழக்கு பகுதியில் சூரபத்மன் ஆணவத்துடன் எங்கள் அழகிய பாலமுருகனை தாண்டி சென்றார். தொடர்ந்து எம்பெருமான் உள்வீதி பவணியை முடித்து கொண்டு இருப்பிடம் அடைந்தார்.

இன்று மாலை 3.00மணிக்கு சூரபத்மன் வெளிவீதி வலம் வருவார். தொடர்ந்து வழமைபோல் 4.30மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகும். தொடர்ந்து முருகப்பெருமான் அழகிய ரிஷப வாகனத்தில்  அடியவர்களிற்கு காட்சிகொடுப்பார்.

ஓம் சரவணபவ ஓம்!!!!