Articles

உலகமே அறிந்த இலங்கையில் தீவில் மிகப் பிர சித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான நல்லூர்க்  கந்தசுவாமி கோயிலின் கர வருடத்துக்கான பெருவிழா 04.08.2011 அன்று கொடியேற்ற திருவிழா முதல் 29.08.2011 பூங்கவனம் வரை மிக பக்தி பூர்வமாக நடை பெற உள்ளது.இதனை தினந்தோறும் நல்லூரான் இணையத்தின் மூலம் உலகம் எங்கும் கண்டுவணங்கலாம். தமிழ்த் தெய்வங்களில் முருகனுக்கு சைவ மக்களிற்கும் இடையிலான உறவு தொன்று தொட்டு மிகவும் நெருக்கமானது. வேண்டுவோர் வேண்டும் வரங்களை எல்லாம் அள்ளி தந்திடும் நல்லாரில் குடிகொண்ட எங்கள் நல்லார் கந்தவேல் கடவுகளை உங்கள் அனைவரதும் நெஞ்சங்களில் நிலை நிறுத்திட நல்லூரான் இணையம் 2009 முதல் இணையத்தில் வலம் வருகின்றது. பலரது முயற்சியினால் நல்லூரான் இணையம் இன்றும் இணையத்தில் இணைந்துள்ளது என்பது எம் அனைவரின்  வேண்டுகோளிற்கும் நல்லூர் கந்தன் எம் அனைவருக்கும் அளித்த ஓர் வரம் இது எனலாம்.எமது இணைய படங்களை பலரும் திருடி தமது இணையத்தில் வெளியிடுவதால் தான் நாம் படங்கள் மற்றும் வீடியோக்களில் watermark களை பயன்படுத்துகிறோம். இதனால் ஏற்படும் அசௌகரியங்களிற்கு முதலில் எம்மை மனிக்கவும்.

கொடிச்சீலை

செங்குந்த பரம்பரையினரால் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலையை சம்பிரதாயபூர்வமாக திருவூர்தியில் எடுத்து வந்து ஆலயத்தில் ஒப்படைக்கின்றமை இவர்களின் பாரம்பரிய உரிமை ஆகும்.நல்லூரிலுள்ள செங்குந்த மரபினர் வருடா வருடம் நல்லூர்க் கந்த சுவாமி கோவிலில் நடைபெறும் கொடியேற்ற விழாவிற்கான கொடிச்சீலையை வழங்குவது மரபாக உள்ளது.இது கொடியேற்ற பெருவிழாவிற்கு முதல் நாள் இடம் பெறும். இது தொடர்பான படங்களை நல்லூரான் இணையத்தில் இன்றே (03.08.2011)கண்டு கொள்ளலாம். மேலும் சிறந்த வீடியோக்காட்சிகளையும் என்னும் சில தினங்களில் கண்டு கொள்ளலாம்.

மஹோற்சவம்

கொடியேற்றமானது ஆடி அமாவாசையிலிருந்து ஆறாவது நாள் ஆரம்பிக்கின்றது. இதற்கு முதல் நாள் வைரவர்உற்சவத்தைத் தொடர்ந்து கொடியேற்றத்திலிருந்து அடுத்து வரும் பத்தாவது நாள் மஞ்சத் திருவிழா மிகவும் சிறப்பான திருவிழாவாகும். முதல் வரும் பத்து நாட்களும் வேல்,வள்ளி,தெய்வானையாக் காட்சிகொடுக்கும் எம்பெருமான். மஞ்சத் திருவிழாவிற்கு முத்துக்குமாரா ,வள்ளி,தெய்வானையாக் காட்சிஅளிப்பார். முதல் பத்து திருவிழாவிற்கும் காலையும் மாலையும் இரு வாகனங்களில் காட்சி தரும் எம்பெருமான் பத்து திருவிழாவிற்கு பின் காலை இருவாகனத்திலும் மாலை மூன்றுவாகனத்திலும் திருக்காட்சி அளிப்பார்.பதினெட்டாவது திருவிழா கார்த்திகை உற்சவமும் இருபதாவது திருவிழா கைலாசவாகனத் திருவிழாவும் இருபத்திரண்டாவது நாள் தெண்டாயுத பாணி உற்சவமும் (மாம்பழத்திருவிழா) இருபத்திமூன்றாம் திருவிழா சப்பறத்திரு விழாவும் இருபத்தினான்காம் நாள் திருவிழா தேர்த்திருவிழாவும் இருபத்தைந் தாம் நாள் திருவிழா தீர்த்தோற்சவமும் இருபத்தாறாவது திருவிழா பூங்காவனத் திருவிழாவும் வெகுவிமர்சியாக நடைபெறும்.அடுத்தநாள்  வைரவர்உற்சவத்துடன் 2011ம் ஆன்டுத்திருவிழா இனிதே நிறைவடையும்.இத்தனை திருவிழாக்களையும் நல்லூரான் இணையத்தின் மூலம் உங்களிற்கு அளிக்க முடியுமென நாம் நினைக்கிறோம். சென்ற வருட திருவிழா வீடியோக் காட்சிகளை வெளியிட முடியாமல் போனது மிக்கவலையான விடயமாகும்.எமது வீடியோ கருவியின் தெழில்நுட்ப குறைபாட்டால் அது எற்பட்டது. எனினும் இம்முறை வீடியோக் காட்சிகளை வெளியிடுவற்கு வெளிநாட்டு நல்லூரான் இணைய நண்பர் ஒருவரின் பண உதவியுடன் வெளியிட முயற்சிக்கிறோம்.

மஹோற்சவ சிறப்பு

திருவிழா காலங்களில் மேன்மை கொள் சைவ நீதி என்பதற்கு சாட்சியாக நல்லூர் காட்சியளிக்கும். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் மஹோற்சவம் ஆரம்பித்து விட்டால் அதன் உற்சாகம் யாழ்ப்பாணத்தில் மாத்திர மல்ல உலகம் முழுவதிலும் காணப்படுகிறது. எந்த மயமும் கந்தமயமாகவே நல்லூர் கந்தசுவாமி கோயிலின் சுற்றாடல் காட்சியளிக்கிறது. இருபத்தைந்து தினங்களும் தினம்தோறும் விரதம் அனுட்டித்து திருக் கோயிலுக்குச் சென்று வலம் வந்து திருவிழாவில் பங்குபற்றி முருகன் அருள் பெற்று வீடு திரும்பும் பக்தர்களின் தொகை அளவிட முடியாது.

நல்லூர் கந்தசாமி கோவிலில் திருவிழா என்றால், யாழ்நகரில் மட்டுமல்ல, முருக அடியார்கள் அனைவரது உள்ளங்களிலும் உற்சாகம்தான். இதனை நல்லூரான் இணையத்தினூடு இங்கு வரமுடியாதவர்கள் தங்கள் உள்ளங்களில் கண்டுகொள்ளலாம். இலங்கையில் தென்பகுதியிலே, கதிர்காமக் கந்தனின் கொடியேற்றத் திருவிழாவைத் தொடர்ந்து வட பகுதியிலுள்ள நல்லூர் கந்தன் ஆலயத்தில் கொடியேறுவது ஒரு சிறப்பாகும்.

ஆலயச் சிறப்பு

வடக்கிலும் தெற்கிலும் பிரசித்திபெற்ற, புகழ்பெற்ற, பாடப்பட்ட முருகனது ஆலயங்கள் இரண்டும், வேலாயுதத்தை முழு அடிப்படையாகக் கொண்டுள்ளமை மற்றுமொரு சிறப்பாகும். நல்லூர் கந்தனின் சிறப்பை யோகர் சுவாமிகள் தனது பாடலில் “நல்லூர் தேரடியில் நான் கண்டு போற்றிசைத்தேன். சொல்லுந்தரமோ சுகம்’ என்றும் “பஞ்சம் படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அச்சுவமோ நாங்களடி கிளியே, நல்லூர் கந்தன் தஞ்சமடி’ என்றும், நல்லூரான் சிறப்பை எடுத்துக்காட்டியுள்ளார்.இவ்வறான நல்லூரான் சிறப்பை நல்லூரான் இணையம் உங்களுடன் பகிர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறது.
முருகவழிபாட்டில், குறிப்பாக உருவ வழிபாடு அதாவது, வேல் வழிபாடு பழைமை வாய்ந்தது. பண்டைய காலத்தில் வேலை வழிபட்டு வந்தவர்களைப் பற்றிய வரலாறுகள் பல உண்டு. வேலை வழிபட்டுவந்தால் அனைத்து இடர்களும் விட்டுவிலகும் என்பது ஐதீகம். இதனால்தான் நம் முன்னோர்கள், “வேலுண்டு வினை தீர்க்க’ என்றும் கூறுவர். நல்லூர் கந்தன் ஆலயத்தின் கருவறையிலும் முருகனது வேலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வேலின் மகிமையை எடுத்துக்கூற, அருணகிரியாரின் திருப்புகழ் ஒரு எடுத்துக்காட்டு. முருகனது புகழைப்பாடச் சற்று தயங்கிய அருணகிரியாரின் நாவில் முருகன் தனது வேலின் நுனியால் “ஓம்’ என்ற மந்திரத்தை எழுதி முருகனது அருளால் பாட வைக்கப்பட்டதுதான் திருப்புகழாகும். வடபகுதியில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் முக்கியமானது இந்த நல்லூரான் பதி. முருகனின் ஆறுபடை வீட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இலங்கையிலுள்ள நல்லூர் கந்தனுக்கும், கதிர்காமக் கந்தனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை நல்லூரான் இணையத்தின் மூலம் 03.08.2011 அன்று வெளியிடுகிறோம்.

நன்றி.

நல்லூரான்வேல்


Leave a Comment