Articles

மன்மத வருடப்பிறப்பு நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவம்
புது வருட தினத்தன்று (14.04.2015) காலை 06.45 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் அதனை தொடர்ந்து சுவாமி மஞ்சல் அலங்காரத்தில் உள்வீதி வெளி வீதி உலா வருவார்
 

மன்மத வருடப்பிறப்பு
மன்மத வரு14 ஆம் திகதி 4 ஆம் மாதம் 2015 செவ்வாய்க்கிழமை சித்திரை முதலாம் நாள் 12:23 நிமிடத்தில் தேய்பிறை தசமி திதியில் அவிட்டம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் வியாகாத நாம யோகத்தில் விட்டிக் கரணத்தில் கடக லக்கினத்தில் கடக நவாம்சத்தில் சுபம் நாம யோகத்தில் இப்புதிய மன்மத வருஷம் பிறக்கின்றது.இவ்வேளையில் நல்லூரில் விசேட தீபாராதனை இடம்பெறும்.

விச புண்ணிய காலம்
காலை 8:23 முதல் மாலை 4:23 வரை

மருத்து நீர் வைக்கும் முறை
விசு புண்ணிய காலத்தில் இறைவனை நினைத்து தூய மனதுடன் பிரார்த்தனை செய்து சிரசில் விலா இலையும்,காலில் கலப்பம் இலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்யுங்கள்.

புதுவருடத்தில் அணியவேண்டிய ஆடைகளின் நிறங்கள் வெண்மைசிவப்பு நிறம் உடைய ஆடைகள் அல்லது வெண்மை இல் சிவப்புக் கரை உடைய புதிய பட்டு ஆடைகளை அணியலாம்.

புது வருடத்தில் அணிய வேண்டிய இரத்தினங்கள் பவளம்,முத்து பதித்த ஆபரணங்கள்

புது வருடத்தில் உண்ண வேண்டிய சுவைகள் வேப்பம் பூ,பொரிக் கறி,கசப்பு என்பன அறுசுவைகள்.

கைவிசேஷ நேரங்கள்
15 .04.2015
மு.ப 9.57 – மு.ப 10.15
மு.ப 10.23 – மு.ப 11.58
பி.ப 2.10 – பி.ப 4.06
*வாக்கிய பஞ்சாங்கம்*


Leave a Comment