Articles

தியான யோகம்

by eegaraiviswa

கர்ம யோக ஞான யோகங்களில் சித்திபெற்றவனுக்குண்டாகும் ஆத்மானுபவம் இந்த அத்தியாயத்தில் கூறப்படுகிறது. இவ்வாத்மானுபவத்தில் ஈடுபட்டு ஆதியிலேயே திருப்தியடைந்தவன் வேறு விஷயங்களில் மனதைச் செலுத்த மாட்டான். அவனுக்குத் தோழன், பகைவன், பந்து, நல்லவன், கெட்டவன் என்று வேறுபாடின்றி எல்லோரிடமும் ஒரேவிதமான மனப்பான்மை ஏற்படும்.

அவன் ஜனங்களுடைய சேர்க்கையை வெறுத்துத் தனிமையிலே விருப்பமுற்றுத் திடமான ஆசனத்திலமர்ந்து தனது ஆத்ம சொரூபத்தை எண்ணி எண்ணி மகிழ்வான். இவ்வாத்மானுபவமே பேரானந்தமென்று எண்ணியிருப்பான். எல்லா ஆத்மாக்களும் தேக சம்பந்தத்தை நீக்கிப் பார்த்தால் ஒருவகைப்பட்டவை என்று எண்ணி, முடிவில் கடவுளும் அவ்வாத்மாக்களும் ஒருவகைப்பட்டவர்களென்று உணர்வான். இந்நிலை பெற்றவனே யோகிகளில் சிறந்தவன்.

श्रीभगवानुवाच
अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः।
स सन्न्यासी च योगी च न निरग्निर्न चाक्रियः॥१॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
அநாஸ்²ரித​: கர்மப²லம் கார்யம் கர்ம கரோதி ய​:|
ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ³ ச ந நிரக்³நிர்ந சாக்ரிய​: ||6-1||

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
ய: கர்மப²லம் அநாஸ்²ரித​: = எவனொருவன் செய்கையின் பயனில் சார்பின்றி
கார்யம் கர்ம கரோதி = செய்யத்தக்கது செய்கிறானோ
ஸ ஸந்ந்யாஸீ யோகீ³ ச = அவன் சந்யாசியும் யோகியும் ஆவான்
ச நிரக்³நி ந = மேலும் அக்னி காரியங்களை மட்டும் துறப்பவன் ஆகமாட்டான்
அக்ரிய​: ச ந = செயல்களை துறப்பவனும் ஆகமாட்டான்

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: செய்கையின் பயனில் சார்பின்றிச் செய்யத்தக்கது செய்வோன் துறவி; அவனே யோகி. தீ வளர்க்காதவனும் கிரியை செய்யாதவனும் அவன் ஆகார்.

यं सन्न्यासमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव।
न ह्यसन्न्यस्तसङ्कल्पो योगी भवति कश्चन॥२॥

யம் ஸந்ந்யாஸமிதி ப்ராஹுர்யோக³ம் தம் வித்³தி⁴ பாண்ட³வ|
ந ஹ்யஸந்ந்யஸ்தஸங்கல்போ யோகீ³ ப⁴வதி கஸ்²சந ||6-2||

பாண்ட³வ = பாண்டவா!
யம் ஸந்ந்யாஸம் இதி ப்ராஹு = எதனை சந்நியாச மென்கிறார்களோ
யோக³ம் தம் வித்³தி⁴ = அதுவே யோகமென்று அறி
ஹி அஸந்ந்யஸ்த ஸங்கல்ப: = ஏனெனில் கோட்பாடுகளைத் துறக்காத
கஸ்²சந யோகீ³ ந ப⁴வதி = எவனும் யோகியாக மாட்டான்

பாண்டவா, எதனை சந்நியாச மென்கிறார்களோ, அதுவே யோகமென்றறி. தன் கோட்பாடுகளைத் துறக்காத எவனும் யோகியாக மாட்டான்.

आरुरुक्षोर्मुनेर्योगं कर्म कारणमुच्यते।
योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते॥३॥

ஆருருக்ஷோர்முநேர்யோக³ம் கர்ம காரணமுச்யதே|
யோகா³ரூட⁴ஸ்ய தஸ்யைவ ஸ²ம​: காரணமுச்யதே ||6-3||

யோக³ம் ஆருருக்ஷோ முநே = யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்கு
கர்ம காரணம் உச்யதே = தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது
தஸ்ய யோகா³ரூட⁴ஸ்ய = அந்நிலையில் ஏறியபின்
ஸ²ம​: ஏவ காரணம் உச்யதே = சாந்தம் கருவியாகிறது

யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்குத் தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது. அந்நிலையில் ஏறியபின் அவனுக்கு சாந்தம் கருவியாகிறது.

यदा हि नेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्जते।
सर्वसङ्कल्पसन्न्यासी योगारूढस्तदोच्यते॥४॥

யதா³ ஹி நேந்த்³ரியார்தே²ஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே|
ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ யோகா³ரூட⁴ஸ்ததோ³ச்யதே ||6-4||

யதா³ இந்த்³ரியார்தே²ஷு ந அநுஷஜ்ஜதே = எப்போது புலன்களுக்குரிய போகப் பொருட்களில் பற்றுக் கொள்வதில்லையோ
கர்மஸு ஹி ந = கர்மங்களிலும் பற்றுக் கொள்வதில்லையோ
ததா³ ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ = அப்போது எல்லா கோட்பாடுகளையும் துறந்தவனான அவன்
யோகா³ரூட⁴ உச்யதே = யோகாரூடன் என்று கூறப் படுகிறான்

ஒருவன் எல்லாக் கோட்பாடுகளையும் துறந்து விட்டுப் புலன்களிலேனும் செயல்களிலேனும் பற்றுதலின்றி யிருப்பானாயின், அப்போதவன் ‘யோக நிலையில் ஏறியவன்’ என்று சொல்லப்படுகிறான்.

उद्धरेदात्मनात्मानं नात्मानमवसादयेत्।
आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः॥५॥

உத்³த⁴ரேதா³த்மநாத்மாநம் நாத்மாநமவஸாத³யேத்|
ஆத்மைவ ஹ்யாத்மநோ ப³ந்து⁴ராத்மைவ ரிபுராத்மந​: ||6-5||

ஆத்மாநம் ஆத்மாநா உத்³த⁴ரேத் = தன்னைத் தான் உயர்த்திக் கொள்க
ஆத்மாநம் ந அவஸாத³யேத் = தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா
ஹி ஆத்மா ஏவ ஆத்மந: ப³ந்து⁴ = தனக்குத்தானே நண்பன்
ஆத்மா ஏவ ஆத்மந​: ரிபு: = தனக்குத்தானே பகைவன்

தன்னைத் தான் உயர்த்திக் கொள்க; தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா; தனக்குத்தானே நண்பன்; தனக்குத்தானே பகைவன்.

बन्धुरात्मात्मनस्तस्य येनात्मैवात्मना जितः।
अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत्॥६॥

ப³ந்து⁴ராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித​:|
அநாத்மநஸ்து ஸ²த்ருத்வே வர்தேதாத்மைவ ஸ²த்ருவத் ||6-6||

ஏன ஆத்மநா ஆத்மா ஜித​: = எந்த ஜீவாத்மாவினால் புலன்களுடன் கூடிய உடல் அடக்கி ஆளப் பட்டிருக்கிறதோ
தஸ்ய ஆத்மநா = அந்த ஜீவாத்மாவிற்கு
ஆத்மா ஏவ ப³ந்து⁴ = தனக்குத் தானே நண்பன்
து அநாத்மந: = ஆனால் தன்னைத்தான் வெல்லாதவன்
ஆத்மா ஏவ ஸ²த்ருவத் = தனக்குத் தான் பகைவனைப் போல
ஸ²த்ருத்வே வர்தேத = பகைமையாக செயல்படுவான்

தன்னைத்தான் வென்றவனே தனக்குத்தான் நண்பன்; தன்னைத்தான் வெல்லாதவன் தனக்குத் தான் பகைவன் போற் கேடு சூழ்கிறான்.

जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः।
शीतोष्णसुखदुःखेषु तथा मानापमानयोः॥७॥

ஜிதாத்மந​: ப்ரஸா²ந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித​:|
ஸீ²தோஷ்ணஸுக²து³​:கே²ஷு ததா² மாநாபமாநயோ​: ||6-7||

ஸீ²தோஷ்ண ஸுக²து³​:கே²ஷு = சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும்
மாந அபமாநயோ​: = மானாபிமானங்களிலும்
ப்ரஸா²ந்தஸ்ய = சமநிலைப்பட்ட
ஜிதாத்மந​: = தன்னை வென்ற மனிதனிடத்தில்
பரமாத்மா ஸமாஹித​: = பரமாத்மா நன்கு நிலைத்து நிற்கிறார்.

தன்னை வென்று ஆறுதலெய்தவனிடத்தே சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும், மானாபிமானங்களிலும் சமநிலைப்பட்ட பரமாத்மா விளங்குகிறது.

ज्ञानविज्ञानतृप्तात्मा कूटस्थो विजितेन्द्रियः।
युक्त इत्युच्यते योगी समलोष्टाश्मकाञ्चनः॥८॥

ஜ்ஞாநவிஜ்ஞாநத்ருப்தாத்மா கூடஸ்தோ² விஜிதேந்த்³ரிய​:|
யுக்த இத்யுச்யதே யோகீ³ ஸமலோஷ்டாஸ்²மகாஞ்சந​: ||6-8||

ஜ்ஞாந விஜ்ஞாந த்ருப்தாத்மா = எவனது உள்ளம் ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தியாக நிறைந்திருக்கிறதோ
கூடஸ்த²: = எந்த சூழ்நிலையிலும் தம் நிலையிலிருந்து பிறழாமல் இருக்கிறானோ
விஜிதேந்த்³ரிய​: = புலன்களை வென்று வசப் படுத்தியுள்ளானோ
ஸம லோஷ்ட அஸ்²ம காஞ்சந​: = ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்றுபோலே காணும்
யோகீ³ யுக்த: இதி உச்யதே = அந்த யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான்

ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தி கொண்டவனாய், மலை முடிவில் நிற்பான் போன்று, புலன்களை வென்று, ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்றுபோலே காணும் யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான்.

सुहृन्मित्रार्युदासीनमध्यस्थद्वेष्यबन्धुषु।
साधुष्वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते॥९॥

ஸுஹ்ருந்மித்ரார்யுதா³ஸீநமத்⁴யஸ்த²த்³வேஷ்யப³ந்து⁴ஷு|
ஸாது⁴ஷ்வபி ச பாபேஷு ஸமபு³த்³தி⁴ர்விஸி²ஷ்யதே ||6-9||

ஸுஹ்ருத் மித்ர உதா³ஸீந மத்⁴யஸ்த² த்³வேஷ்ய ப³ந்து⁴ஷு = அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார்
ஸாது⁴ஷு பாபேஷு ச அபி = சாதுக்கள், பாவிகளிடம் கூட
ஸமபு³த்³தி⁴ = எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன்
விஸி²ஷ்யதே = மேலோனாவான்

ஞானமென்பது கடவுளியலைப் பற்றிய அறிவு. விஞ்ஞானமென்பது உலகவியலைப் பற்றியது. அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன் மேலோனாவான்.

योगी युञ्जीत सततमात्मानं रहसि स्थितः।
एकाकी यतचित्तात्मा निराशीरपरिग्रहः॥१०॥

யோகீ³ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தி²த​:|
ஏகாகீ யதசித்தாத்மா நிராஸீ²ரபரிக்³ரஹ​: ||6-10||

யத சித்தாத்மா நிராஸீ² = உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து
அபரிக்³ரஹ​: = ஏற்பது நீக்கிய
யோகீ³ ஏகாகீ = யோகி தனியனாக
ரஹஸி ஸ்தி²த​: = மறைவிடத்தில் இருந்துகொண்டு
ஸததம் ஆத்மாநம் யுஞ்ஜீத = எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான்

மறைவிடத்தில் இருந்துகொண்டு, தனியனாய் உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து, ஏற்பது நீக்கி எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான்.

शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमासनमात्मनः।
नात्युच्छ्रितं नातिनीचं चैलाजिनकुशोत्तरम्॥११॥

ஸு²சௌ தே³ஸே² ப்ரதிஷ்டா²ப்ய ஸ்தி²ரமாஸநமாத்மந​:|
நாத்யுச்ச்²ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுஸோ²த்தரம் ||6-11||

ஸு²சௌ தே³ஸே² = சுத்தமான இடத்தில்
சைல அஜிந குஸ² உத்தரம் = துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது
ந அத்யுச்ச்²ரிதம் ந அதிநீசம் = அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும்
ஆத்மந​: ஸ்தி²ரம் ஆஸநம் = தனக்கோர் உறுதியான ஆசனம்
ப்ரதிஷ்டா²ப்ய = அமைத்துக் கொண்டு

சுத்தமான இடத்தில் அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும், துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது தனக்கோர் உறுதியான, ஆசனம் சமைத்துக்கொண்டு,

तत्रैकाग्रं मनः कृत्वा यतचित्तेन्द्रियक्रियाः।
उपविश्यासने युञ्ज्याद्योगमात्मविशुद्धये॥१२॥

தத்ரைகாக்³ரம் மந​: க்ருத்வா யதசித்தேந்த்³ரியக்ரியா​:|
உபவிஸ்²யாஸநே யுஞ்ஜ்யாத்³யோக³மாத்மவிஸு²த்³த⁴யே ||6-12||

தத்ர ஆஸநே உபவிஸ்²ய = அந்த ஆசனத்தில் அமர்ந்து
யதசித்த இந்த்³ரிய க்ரிய: = உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி
மந​: ஏகாக்³ரம் க்ருத்வா = மனதை ஒருமுகமாக்கி
ஆத்மவிஸு²த்³த⁴யே = ஆத்மா நன்கு தூய்மையடையும்படி
யோக³ யுஞ்ஜ்யாத்³ = யோகத்திலே பொருந்தக் கடவான்

அங்கு மனதை ஒருமுகமாக்கி, உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி, ஆசனத்தமர்ந்து ஆத்மா நன்கு தூய்மையடையும்படி யோகத்திலே பொருந்தக் கடவான்.

समं कायशिरोग्रीवं धारयन्नचलं स्थिरः।
सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशश्चानवलोकयन्॥१३॥

ஸமம் காயஸி²ரோக்³ரீவம் தா⁴ரயந்நசலம் ஸ்தி²ர​:|
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்³ரம் ஸ்வம் தி³ஸ²ஸ்²சாநவலோகயந் ||6-13||

காய ஸி²ரோ க்³ரீவம் ஸமம் = உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக
ச அசலம் தா⁴ரயந் = அசைவின்றி வைத்துக்கொண்டு
தி³ஸ²: அநவலோகயந் = திசைகளை நோக்காமல்
ஸ்வம் நாஸிகாக்³ரம் = தன்னுடைய மூக்கு நுனியை
ஸம்ப்ரேக்ஷ்ய = பார்த்துக் கொண்டு

உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக அசைவின்றி வைத்துக்கொண்டு, உறுதி சான்றவனாய், மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு, திசைகளை நோக்காமல்,

प्रशान्तात्मा विगतभीर्ब्रह्मचारिव्रते स्थितः।
मनः संयम्य मच्चित्तो युक्त आसीत मत्परः॥१४॥

ப்ரஸா²ந்தாத்மா விக³தபீ⁴ர்ப்³ரஹ்மசாரிவ்ரதே ஸ்தி²த​:|
மந​: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர​: ||6-14||

ப்ரஸா²ந்தாத்மா விக³தபீ⁴ = நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி
ப்³ரஹ்மசாரிவ்ரதே ஸ்தி²த​: = பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு
மந​: ஸம்யம்ய = மனதை வசப்படுத்தி
மச்சித்த: மத்பர​: = என்னிடத்தே சித்தத்தை இசைத்து, என்னையே அடையத்தக்க கதி எனக்கொண்டு
யுக்த: ஆஸீத = யோகத்திலிருக்கக் கடவான்

நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி, பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு, மனதை வசப்படுத்தி, என்னிடத்தே சித்தத்தை இசைத்து, எனக்கு ஈடுபட்டு யோகத்திலிருக்கக் கடவான்.

युञ्जन्नेवं सदात्मानं योगी नियतमानसः।
शान्तिं निर्वाणपरमां मत्संस्थामधिगच्छति॥१५॥

யுஞ்ஜந்நேவம் ஸதா³த்மாநம் யோகீ³ நியதமாநஸ​:|
ஸா²ந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தா²மதி⁴க³ச்ச²தி ||6-15||

நியதமாநஸ​: = மனதைக் கட்டுப்படுத்தி
யோகீ³ ஏவம் = யோகி இவ்விதம்
ஆத்மாநம் ஸதா³ யுஞ்ஜந் = ஆத்மாவை இடையறாது (பிரம்மத்துடன்) இணைத்துக் கொண்டு
மத்ஸம்ஸ்தா²ம் நிர்வாணபரமாம் = என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள
ஸா²ந்திம் அதி⁴க³ச்ச²தி = ஆறுதலை அடைவான்

இங்ஙனம் எப்போதும் மனதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவில் யோகமுற்றிருக்கும் யோகி, என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள ஆறுதலையறிவான்.

नात्यश्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनश्नतः।
न चातिस्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन॥१६॥

நாத்யஸ்²நதஸ்து யோகோ³ऽஸ்தி ந சைகாந்தமநஸ்²நத​:|
ந சாதிஸ்வப்நஸீ²லஸ்ய ஜாக்³ரதோ நைவ சார்ஜுந ||6-16||

அர்ஜுந! = அர்ஜுனா!
அத்யஸ்²நத து யோக³: ந அஸ்தி = மிகைபட உண்போனுக்கு யோகமில்லை
அநஸ்²நத​: ச ஏகாந்தம் ந = உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது
ந ச அதிஸ்வப்நஸீ²லஸ்ய = மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை
ஜாக்³ரத: ஏவ ந = மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை

மிகைபட உண்போனுக்கு யோகமில்லை; உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது. மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை; அர்ஜுனா, மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.

युक्ताहारविहारस्य युक्तचेष्टस्य कर्मसु।
युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखहा॥१७॥

யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு|
யுக்தஸ்வப்நாவபோ³த⁴ஸ்ய யோகோ³ ப⁴வதி து³​:க²ஹா ||6-17||

யுக்த ஆஹார விஹாரஸ்ய= ஒழுங்குக்கு உட்பட்ட உணவு உண்டு நடமாடுகிறவனுக்கு
கர்மஸு யுக்தசேஷ்டஸ்ய = வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட முயற்சி செய்கிறவனுக்கும்
ஸ்வப்ந அவபோ³த⁴ஸ்ய யுக்த = உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின்
து³​:க²ஹா யோக³: ப⁴வதி = துயரை அழிக்கும் யோகம் கை கூடுகிறது

ஒழுங்குக்கு உட்பட்ட உணவும், விளையாட்டும் உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது. 17

यदा विनियतं चित्तमात्मन्येवावतिष्ठते।
निःस्पृहः सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा॥१८॥

யதா³ விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்ட²தே|
நி​:ஸ்ப்ருஹ​: ஸர்வகாமேப்⁴யோ யுக்த இத்யுச்யதே ததா³ ||6-18||

விநியதம் சித்தம் = தன்வசப் பட்டுள்ள உள்ளம்
யதா³ ஆத்மநி ஏவ = எப்பொழுது தனதுள்ளேயே
அவதிஷ்ட²தே = நிலைபெற்றிருகிறதோ
ததா³ ஸர்வகாமேப்⁴ய: நி​:ஸ்ப்ருஹ​: = அப்போது எந்த விருப்பத்திலும் பற்று நீங்கிய மனிதன்
யுக்த: இதி உச்யதே = யோக முற்றான் எனப் படுவான்

உள்ளம் கட்டுக்கடங்கித் தனதுள்ளேயே நிலைபெற, ஒருவன் எந்த விருப்பத்திலும் வீழ்ச்சியற்றானாயின், யோக முற்றானெனப் படுவான்.

यथा दीपो निवातस्थो नेङ्गते सोपमा स्मृता।
योगिनो यतचित्तस्य युञ्जतो योगमात्मनः॥१९॥

யதா² தீ³போ நிவாதஸ்தோ² நேங்க³தே ஸோபமா ஸ்ம்ருதா|
யோகி³நோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோக³மாத்மந​: ||6-19||

நிவாதஸ்த²: தீ³ப: = காற்றில்லாத இடத்தில் விளக்கு
யதா² ந இங்க³தே = எப்படி அசையாமல் இருக்குமோ
ஸா உபமா = அதே உவமை
ஆத்மந: யோக³ம் யுஞ்ஜத: யோகி³ந: = ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகியினுடைய
யதசித்தஸ்ய ஸ்ம்ருதா = வெற்றி கொள்ளப பட்ட மனதிற்கும் சொல்லப் பட்டது

சித்தத்தைக் கட்டி ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகிக்குக் காற்றில்லாத இடத்தில் அசைவின்றி நிற்கும் விளக்கை முன்னோர் உவமையாகக் காட்டினர்.

यत्रोपरमते चित्तं निरुद्धं योगसेवया।
यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति॥२०॥

யத்ரோபரமதே சித்தம் நிருத்³த⁴ம் யோக³ஸேவயா|
யத்ர சைவாத்மநாத்மாநம் பஸ்²யந்நாத்மநி துஷ்யதி ||6-20||

யோக³ஸேவயா = யோகப் பயிற்சியினால்
நிருத்³த⁴ம் சித்தம் = கட்டுண்ட சித்தம்
யத்ர உபரமதே = எங்கு ஆறுதல் எய்துமோ
ச யத்ர ஆத்மநா ஆத்மாநம் பஸ்²யந் = எங்கு ஆத்மாவினால் ஆத்மாவையறிந்து
ஆத்மநி ஏவ துஷ்யதி = ஆத்மாவில் மகிழ்ச்சியடைகிறானோ

எங்கு சித்தம் யோக ஒழுக்கத்தில் பிடிப்புற்று ஆறுதலெய்துமோ, எங்கு ஆத்மாவினால் ஆத்மாவையறிந்து ஒருவன் ஆத்மாவில் மகிழ்ச்சியடைகிறானோ

सुखमात्यन्तिकं यत्तद्बुद्धिग्राह्यमतीन्द्रियम्।
वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः॥२१॥

ஸுக²மாத்யந்திகம் யத்தத்³பு³த்³தி⁴க்³ராஹ்யமதீந்த்³ரியம்|
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்தி²தஸ்²சலதி தத்த்வத​: ||6-21||

அதீந்த்³ரியம் = புலன்களைக் கடந்து நிற்பதும்
பு³த்³தி⁴க்³ராஹ்யம் = புத்தியால் தீண்டத்தக்கதும்
யத் ஆத்யந்திகம் ஸுக²ம் = எந்த முடிவற்ற பேரின்பத்தை
தத் யத்ர வேத்தி = அதை எங்கு காண்பானோ
யத்ர ஸ்தி²த = எங்கு நிலைபெறுவதால்
தத்த்வத​: ந ஏவ சலதி = இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ

புத்தியால் தீண்டத்தக்கதும், புலன்களைக் கடந்து நிற்பதுமாகிய பேரின்பத்தை எங்குக் காண்பானோ, எங்கு நிலைபெறுவதால் இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ,

यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं ततः।
यस्मिन्स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते॥२२॥

யம் லப்³த்⁴வா சாபரம் லாப⁴ம் மந்யதே நாதி⁴கம் தத​:|
யஸ்மிந்ஸ்தி²தோ ந து³​:கே²ந கு³ருணாபி விசால்யதே ||6-22||

யம் லாப⁴ம் லப்³த்⁴வா = எதனை யெய்தியபின்
தத: அபரம் அதி⁴கம் ந மந்யதே ச = அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ
யஸ்மிந் ஸ்தி²த: = எங்கு நிலை பெறுவதால்
கு³ருணா து³​:கே²ந அபி = பெரிய துக்கத்தாலும்
ந விசால்யதே = சலிப்பெய்த மாட்டானோ

எதனை யெய்தியபின் அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ, எங்கு நிலை பெறுவதாய் பெரிய துக்கத்தாலும் சலிப்பெய்த மாட்டானோ,

तं विद्याद्दुःखसंयोगवियोगं योगसंज्ञितम्।
स निश्चयेन योक्तव्यो योगोऽनिर्विण्णचेतसा॥२३॥

தம் வித்³யாத்³து³​:க²ஸம்யோக³வியோக³ம் யோக³ஸம்ஜ்ஞிதம்|
ஸ நிஸ்²சயேந யோக்தவ்யோ யோகோ³ऽநிர்விண்ணசேதஸா ||6-23||

து³​:க² ஸம்யோக³ வியோக³ம் = துன்பத்துடன் கலத்தலை விடுதலை
தம் யோக³ஸம்ஜ்ஞிதம் = அந்நிலையே யோக நிலையென்று
வித்³யாத் = உணர்
ஸ யோக³: = அந்த யோகத்தை
அநிர்விண்ணசேதஸா = உள்ளத்தில் ஏக்கமின்றி
நிஸ்²சயேந யோக்தவ்ய: = உறுதியுடன் பற்றி நிற்கக் கடவான்

அந்நிலையே துன்பத்துடன் கலத்தலை விடுதலாகிய யோக நிலையென்று உணர். உள்ளத்தில் ஏக்கமின்றி உறுதியுடன் அந்த யோகத்தை ஒருவன் பற்றி நிற்கக் கடவான்.

सङ्कल्पप्रभवान्कामांस्त्यक्त्वा सर्वानशेषतः।
मनसैवेन्द्रियग्रामं विनियम्य समन्ततः॥२४॥

ஸங்கல்பப்ரப⁴வாந்காமாம்ஸ்த்யக்த்வா ஸர்வாநஸே²ஷத​:|
மநஸைவேந்த்³ரியக்³ராமம் விநியம்ய ஸமந்தத​: ||6-24||

ஸங்கல்பப்ரப⁴வாந் = சங்கல்பத்தினின்றும் எழும்
ஸர்வாந் காமாந் அஸே²ஷத​: த்யக்த்வா = எல்லா விருப்பங்களையும் மிச்சமற துறந்துவிட்டு
மநஸா இந்த்³ரியக்³ராமம் ஸமந்தத​: ஏவ விநியம்ய = மனதினால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி

சங்கல்பத்தினின்றும் எழும் எல்லா விருப்பங்களையும் மிச்சமறத் துறந்துவிட்டு, எல்லாப் பக்கங்களிலும் மனத்தால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி,

शनैः शनैरुपरमेद्बुद्ध्या धृतिगृहीतया।
आत्मसंस्थं मनः कृत्वा न किञ्चिदपि चिन्तयेत्॥२५॥

ஸ²நை​: ஸ²நைருபரமேத்³பு³த்³த்⁴யா த்⁴ருதிக்³ருஹீதயா|
ஆத்மஸம்ஸ்த²ம் மந​: க்ருத்வா ந கிஞ்சித³பி சிந்தயேத் ||6-25||

ஸ²நை​: ஸ²நை: உபரமேத்= மெல்ல மெல்ல ஆறுதல் பெறச் செய்து
த்⁴ருதி க்³ருஹீதயா பு³த்³த்⁴யா = துணிந்த மதியுடன்
மந​: ஆத்மஸம்ஸ்த²ம் க்ருத்வா = மனதை ஆத்மாவில் நிறுத்தி
கிஞ்சித் அபி ந சிந்தயேத் = எதற்கும் கவலையுறாதிருக்கக் கடவான்

துணிந்த மதியுடன் மனதை ஆத்மாவில் நிறுத்தி மெல்ல மெல்ல ஆறுதல் பெறக் கடவான்; எதற்கும் கவலையுறாதிருக்கக் கடவான்.

यतो यतो निश्चरति मनश्चञ्चलमस्थिरम्।
ततस्ततो नियम्यैतदात्मन्येव वशं नयेत्॥२६॥

யதோ யதோ நிஸ்²சரதி மநஸ்²சஞ்சலமஸ்தி²ரம்|
ததஸ்ததோ நியம்யைததா³த்மந்யேவ வஸ²ம் நயேத் ||6-26||

யத: யத: = எங்கெங்கே
எதத் அஸ்தி²ரம் = இந்த நிலையில்லாத
சஞ்சலம் மந: நிஸ்²சரதி = சஞ்சலமான மனம் அலைகிறதோ
தத: தத: நியம்ய = அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி
ஆத்மநி ஏவ வஸ²ம் நயேத் = ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க

எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழலுகிறதோ, அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க.

प्रशान्तमनसं ह्येनं योगिनं सुखमुत्तमम्।
उपैति शान्तरजसं ब्रह्मभूतमकल्मषम्॥२७॥

ப்ரஸா²ந்தமநஸம் ஹ்யேநம் யோகி³நம் ஸுக²முத்தமம்|
உபைதி ஸா²ந்தரஜஸம் ப்³ரஹ்மபூ⁴தமகல்மஷம் ||6-27||

ஹி ப்ரஸா²ந்தமநஸம் = ஏனெனில் மனம் சாந்தமாக
அகல்மஷம் ஸா²ந்தரஜஸம் = மாசு நீங்கி, ரஜோ குணம் ஆறி
ப்³ரஹ்மபூ⁴தம் = பிரம்மமேயாகிய
ஏநம் யோகி³நம் = இந்த யோகிக்கு
உத்தமம் ஸுக²ம் உபைதி = மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது

மனம் சாந்தமாய், ரஜோ குணம் ஆறி, மாசு நீங்கி, பிரம்மமேயாகிய இந்த யோகிக்கு மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது.

युञ्जन्नेवं सदात्मानं योगी विगतकल्मषः।
सुखेन ब्रह्मसंस्पर्शमत्यन्तं सुखमश्नुते॥२८॥

யுஞ்ஜந்நேவம் ஸதா³த்மாநம் யோகீ³ விக³தகல்மஷ​:|
ஸுகே²ந ப்³ரஹ்மஸம்ஸ்பர்ஸ²மத்யந்தம் ஸுக²மஸ்²நுதே ||6-28||

விக³தகல்மஷ​: = குற்றங்களைப் போக்கி
ஏவம் ஸதா³ ஆத்மாநம் யுஞ்ஜந் = இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின்
ப்³ரஹ்ம ஸம்ஸ்பர்ஸ²ம் = (அந்த யோகி) பிரம்மத்தைத் தொடுவதாகிய
அத்யந்தம் ஸுக²ம் = மிக உயர்ந்த இன்பத்தை
ஸுகே²ந ஸுக²ம் அஸ்²நுதே = எளிதில் துய்க்கிறான்.

குற்றங்களைப் போக்கி இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின், அந்த யோகி பிரம்மத்தைத் தொடுவதாகிய மிக உயர்ந்த இன்பத்தை எளிதில் துய்க்கிறான்.

सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि।
ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शनः॥२९॥

ஸர்வபூ⁴தஸ்த²மாத்மாநம் ஸர்வபூ⁴தாநி சாத்மநி|
ஈக்ஷதே யோக³யுக்தாத்மா ஸர்வத்ர ஸமத³ர்ஸ²ந​: ||6-29||

யோக³யுக்தாத்மா = யோகத்தில் கலந்தவன்
ஸர்வத்ர ஸமத³ர்ஸ²ந​: = எங்கும் சமப் பார்வையுடையவனாய்
ஸர்வபூ⁴தாநி ஆத்மாநம் = எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும்
ஆத்மநி ச ஸர்வபூ⁴தாநி = தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும்
ஈக்ஷதே = காணுகிறான்

யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான்.

यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति।
तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति॥३०॥

யோ மாம் பஸ்²யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஸ்²யதி|
தஸ்யாஹம் ந ப்ரணஸ்²யாமி ஸ ச மே ந ப்ரணஸ்²யதி ||6-30||

ய: ஸர்வத்ர மாம் பஸ்²யதி = எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ
ஸர்வம் ச மயி பஸ்²யதி = எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ
தஸ்ய அஹம் ந ப்ரணஸ்²யாமி = அவனுக்கு நான் காணப் படாமல் போவதில்லை
ஸ ச மே ந ப்ரணஸ்²யதி = எனக்கும் அவன் காணப் படாமல் போவதில்லை

எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ, அவனுக்கு நான் அழியமாட்டேன்; எனக்கவன் அழியமாட்டான்.

सर्वभूतस्थितं यो मां भजत्येकत्वमास्थितः।
सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते॥३१॥

ஸர்வபூ⁴தஸ்தி²தம் யோ மாம் ப⁴ஜத்யேகத்வமாஸ்தி²த​:|
ஸர்வதா² வர்தமாநோऽபி ஸ யோகீ³ மயி வர்ததே ||6-31||

ய: ஏகத்வம் ஆஸ்தித = எவன் ஒருமையில் நிலைகொண்டவனாக
ஸர்வபூ⁴தஸ்தி²தம் = எல்லா உயிர்களிடத்திலுமுள்ள
மாம் ப⁴ஜதி = என்னைத் தொழுவோன்
ஸ யோகீ³: = அந்த யோகி
ஸர்வதா² வர்தமாந அபி = யாங்கணும் சென்றபோதிலும்
மயி வர்ததே = என்னுள்ளேயே செயல் பட்டுக் கொண்டிருக்கிறான்.

ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழுவோன், யாங்கணும் சென்றபோதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.

आत्मौपम्येन सर्वत्र समं पश्यति योऽर्जुन।
सुखं वा यदि वा दुःखं स योगी परमो मतः॥३२॥

ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஸ்²யதி யோऽர்ஜுந|
ஸுக²ம் வா யதி³ வா து³​:க²ம் ஸ யோகீ³ பரமோ மத​: ||6-32||

அர்ஜுந ய: = அர்ஜுனா! எந்த யோகி
யதி³ ஸுக²ம் வா து³​:க²ம் வா = இன்பமாயினும், துன்பமாயினும்
ஸர்வத்ர ஆத்ம ஔபம்யேந = எல்லாவற்றிலும்/எல்லாவற்றையும் தன்னைப் போலவே
ஸமம் பஸ்²யதி = சமமாக பார்க்கிறானோ
ஸ: பரம யோகீ³ மத​: = அவன் பரமயோகியாகக் கருதப்படுவான்

இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்ம சமத்துவம் பற்றி சமப் பார்வை செலுத்துவானாயின், அவன் பரமயோகியாகக் கருதப்படுவான்.

अर्जुन उवाच
योऽयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसूदन।
एतस्याहं न पश्यामि चञ्चलत्वात्स्थितिं स्थिराम्॥३३॥

அர்ஜுந உவாச
யோऽயம் யோக³ஸ்த்வயா ப்ரோக்த​: ஸாம்யேந மது⁴ஸூத³ந|
ஏதஸ்யாஹம் ந பஸ்²யாமி சஞ்சலத்வாத்ஸ்தி²திம் ஸ்தி²ராம் ||6-33||

அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
மது⁴ஸூத³ந! = மதுசூதனா
அயம் யோக³ ஸாம்யேந = இந்த யோகம் சம பாவனையோடு கூடியதென்று
ய: த்வயா ப்ரோக்த​: = எது உங்களால் சொல்லப் பட்டதோ
ஏதஸ்ய ஸ்தி²ராம் ஸ்தி²திம் = அந்த யோகத்தினுடைய உறுதியான இருப்பை
சஞ்சலத்வாத் அஹம் ந பஸ்²யாமி = எனது சஞ்சலத் தன்மையால் எனக்குத் தோன்றவில்லை

அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, இங்ஙனம் நீ சமத்துவத்தால் ஏற்படுவதாகச் சொல்லிய யோகம், ஸ்திரமான நிலையுடையதாக எனக்குத் தோன்றவில்லை, எனது சஞ்சலத் தன்மையால்.

चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्दृढम्।
तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम्॥३४॥

சஞ்சலம் ஹி மந​: க்ருஷ்ண ப்ரமாதி² ப³லவத்³த்³ருட⁴ம்|
தஸ்யாஹம் நிக்³ரஹம் மந்யே வாயோரிவ ஸுது³ஷ்கரம் ||6-34||

ஹி க்ருஷ்ண = ஏனெனில் கண்ணா!
மந​: சஞ்சலம் = மனம் சஞ்சலமுடையது
ப்ரமாதி² = தவறும் இயல்பினது
ப³லவத் த்³ருட⁴ம் = வலியது; உரனுடையது
தஸ்ய நிக்³ரஹம் வாயு: இவ = அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல்
ஸுது³ஷ்கரம் அஹம் மந்யே = மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் நினைக்கிறேன்

கண்ணா, மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்.

श्रीभगवानुवाच
असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम्।
अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते॥३५॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
அஸம்ஸ²யம் மஹாபா³ஹோ மநோ து³ர்நிக்³ரஹம் சலம்|
அப்⁴யாஸேந து கௌந்தேய வைராக்³யேண ச க்³ருஹ்யதே ||6-35||

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
மஹாபா³ஹோ = பெருந்தோளாய்
அஸம்ஸ²யம் மந: சலம் = ஐயமின்றி மனம் சலனமுடையதுதான்
து³ர்நிக்³ரஹம் து = கட்டுதற்கரியது தான்
கௌந்தேய! அப்⁴யாஸேந வைராக்³யேண ச = குந்தியின் மகனே! பழக்கத்தாலும், வைராக்கியத்தாலும்
க்³ருஹ்யதே = வசப் படுத்தப் படுகிறது.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளாய், மனம் கட்டுதற்கரியதுதான். சலனமுடையதுதான்; ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே, அதைப் பழக்கத்தாலும், விருப்பமின்மையாலும் கட்டி விடலாம்.

असंयतात्मना योगो दुष्प्राप इति मे मतिः।
वश्यात्मना तु यतता शक्योऽवाप्तुमुपायतः॥३६॥

அஸம்யதாத்மநா யோகோ³ து³ஷ்ப்ராப இதி மே மதி​:|
வஸ்²யாத்மநா து யததா ஸ²க்யோऽவாப்துமுபாயத​: ||6-36||

அஸம்யத ஆத்மநா = தன்னைக் கட்டாதவன்
யோக³: து³ஷ்ப்ராப = யோக மெய்துதல் அரிது
து வஸ்²ய ஆத்மநா யததா உபாயத​:= தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும்
அவாப்தும் ஸ²க்ய: = யோகத்தை அடைவதும் சாத்தியமானது
இதி மே மதி​: = என்று நான் கருதுகிறேன்

தன்னைக் கட்டாதவன் யோக மெய்துதல் அரிதென்று நான் கருதுகிறேன். தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும் அதை எய்த வல்லான்.

अर्जुन उवाच
अयतिः श्रद्धयोपेतो योगाच्चलितमानसः।
अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति॥३७॥

அர்ஜுந உவாச
அயதி​: ஸ்²ரத்³த⁴யோபேதோ யோகா³ச்சலிதமாநஸ​:|
அப்ராப்ய யோக³ஸம்ஸித்³தி⁴ம் காம் க³திம் க்ருஷ்ண க³ச்ச²தி ||6-37||

அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
ஸ்²ரத்³த⁴யா உபேத: = யோகத்தில் சிரத்தை உள்ளவனாக இருந்தும்
அயதி​: யோகா³த் சலிதமாநஸ​:= தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவியவன்
யோக³ஸம்ஸித்³தி⁴ம் அப்ராப்ய = யோகத்தில் தோற்றுப் போய்
காம் க³திம் க³ச்ச²தி க்ருஷ்ண! = என்ன கதியடைகிறான் கண்ணா!

அர்ஜுனன் சொல்லுகிறான்: நம்பிக்கையுடையோ னெனினும், தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவியவன், யோகத்தில் தோற்றுப் போய், அப்பால் என்ன கதியடைகிறான், கண்ணா?

कच्चिन्नोभयविभ्रष्टश्छिन्नाभ्रमिव नश्यति।
अप्रतिष्ठो महाबाहो विमूढो ब्रह्मणः पथि॥३८॥

கச்சிந்நோப⁴யவிப்⁴ரஷ்டஸ்²சி²ந்நாப்⁴ரமிவ நஸ்²யதி|
அப்ரதிஷ்டோ² மஹாபா³ஹோ விமூடோ⁴ ப்³ரஹ்மண​: பதி² ||6-38||

மஹாபா³ஹோ ப்³ரஹ்மண​: = பெருந்தோளாய்! பிரம்மத்தை அடைகின்ற
பதி² விமூடோ⁴ = மார்க்கத்தில் வழி தெரியாமல் மயங்கி
அப்ரதிஷ்ட²: = உறுதியற்றவனாக
உப⁴ய விப்⁴ரஷ்ட = இரண்டுங் கெட்டவனாக
சி²ந்ந அப்⁴ரம் இவ = உடைந்த மேகம்போல்
கச்சித் ந நஸ்²யதி = அழிந்து போக மாட்டானா?

ஒருவேளை அவன் இரண்டுங் கெட்டவனாய், உடைந்த மேகம்போல் அழிகிறானோ? பெருந்தோளாய், உறுதியற்றவனாய், பிரம்ம நெறியிலே குழப்பமெய்திய மூடன் யாதாகிறான்?

एतन्मे संशयं कृष्ण छेत्तुमर्हस्यशेषतः।
त्वदन्यः संशयस्यास्य छेत्ता न ह्युपपद्यते॥३९॥

ஏதந்மே ஸம்ஸ²யம் க்ருஷ்ண சே²த்துமர்ஹஸ்யஸே²ஷத​:|
த்வத³ந்ய​: ஸம்ஸ²யஸ்யாஸ்ய சே²த்தா ந ஹ்யுபபத்³யதே ||6-39||

க்ருஷ்ண! மே ஏதத் ஸம்ஸ²யம் = கண்ணா! எனக்குள்ளே இந்த ஐயத்தை
அஸே²ஷத​: சே²த்தும் அர்ஹஸி = மீதமின்றி போக்க (நீயே) தகுதியானவன்
ஹி அஸ்ய ஸம்ஸ²யஸ்ய சே²த்தா = ஏனெனில் இந்த சந்தேகத்தை போக்குபவர்
த்வத் அந்ய​: உபபத்³யதே = நின்னையன்றி வேறெவருமிலர்

கண்ணா, எனக்குள்ளே இந்த ஐயத்தை நீ அறுத்து விடுக. நின்னையன்றி இந்த ஐயத்தை யறுப்போர் வேறெவருமிலர்.

श्रीभगवानुवाच
पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते।
न हि कल्याणकृत्कश्चिद्दुर्गतिं तात गच्छति॥४०॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
பார்த² நைவேஹ நாமுத்ர விநாஸ²ஸ்தஸ்ய வித்³யதே|
ந ஹி கல்யாணக்ருத்கஸ்²சித்³து³ர்க³திம் தாத க³ச்ச²தி ||6-40||

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
பார்த² = பார்த்தா
தஸ்ய இஹ விநாஸ² ந வித்³யதே = அவனுக்கு இவ்வுலகிலும் அழிவில்லை
அமுத்ர ஏவ ந = மேலுலகத்திலும் இல்லை
தாத = பிரியமானவனே (மகனே!)
ஹி கல்யாணக்ருத் = ஏனெனில் ஆன்மீக மேம்பாட்டிற்காக
கஸ்²சித் து³ர்க³திம் ந க³ச்ச²தி = எவனும் கெட்ட கதியடைய மாட்டான்

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, அவனுக்கு இவ்வுலகிலும், மேலுலகத்திலும் அழிவில்லை; மகனே, நன்மை செய்வோன் எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.

प्राप्य पुण्यकृतां लोकानुषित्वा शाश्वतीः समाः।
शुचीनां श्रीमतां गेहे योगभ्रष्टोऽभिजायते॥४१॥

ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஸா²ஸ்²வதீ​: ஸமா​:|
ஸு²சீநாம் ஸ்ரீமதாம் கே³ஹே யோக³ப்⁴ரஷ்டோऽபி⁴ஜாயதே ||6-41||

யோக³ப்⁴ரஷ்ட: = யோகத்தில் தவறியவன்
புண்யக்ருதாம் லோகாந் ப்ராப்ய = புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி
ஸா²ஸ்²வதீ​: ஸமா​: ஊஷித்வா = அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து
ஸு²சீநாம் ஸ்ரீமதாம் கே³ஹே = தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில்
அபி⁴ஜாயதே = பிறக்கிறான்.

யோகத்தில் தவறியவன், புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, தூய


Leave a Comment