Videos

சிவபூமி எனப்படும் இலங்கைத்திருநாட்டின் புண்ணியப்பதி நல்லை அகிலலோக நாயக
 சர்வலங்கார மூர்த்தி சிங்கார வேலவர் அருள்கந்தப் பெருமானுக்கு இன்று காலை கைலாசவாகனத் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி நல்லூர் அருள்மிகு
 கந்தசுவாமிகோவில் வருடாந்த துர்முகிவருஷ மஹோற்ஸவத்தின் 10ஆம் நாள்  திருமஞ்சத் 
 திருவிழா இன்றாகும். காலை உற்வஸத்தில் எம்பெருமான் வள்ளிதேவசேனாசமேத முத்துக்குமாரசுவாமி 
கைலாயவாகனத்தில் எழுந்தருளல் .மாலை உற்வஸத்தில்  திருமஞ்சத்தில் எழுந்தருளல் .

இலங்கையின் இராவண மன்னன் விரைந்துமே தேரினில் செல்ல
தலமது கைலைக் குன்றோ தடையென ஆன போது
மலையதை அசைத்ததாலே அகந்தையும் போன செய்தி இலங்கிட
தலமது நல்லூரில் இன்று கைலாசவாகனம் காண வாரீர்.

பாவலர் நாவலர் எனும்பலர் இலங்கும்
நல்லூராம் நகரினில் அருளினைப் புரிய
கோயில்கொண் டமர்ந்திடும் குஞ்சரிக் கணவன்
திருவிழா நாளிலே திருமஞ்சத் தமர்ந்து
தேவர்கள் உலவிடும் நல்லூரின் வீதியில்
ஊர்ந்தருள் புரிந்திட வலம்வரும் காட்சியை
பாவதில் எழுதிட மொழியில்லை அன்றோ
பாவமும் நீக்கிட பவனி செய்தருள்வார்.


Leave a Comment