Articles

நல்லூர் திருவிழா என்றதும் மனதில் ஐய்யன் கந்தன் தோன்றுமிடத்து சமாந்தரமாய் காட்சி தருபவர் நிர்வாகி மாப்பாணர்...

இந்துக்கலாச்சார அமைச்சராக இருந்த போது மகேஸ்வரன்,பிறதொருநாளில் அமைச்சர் டக்ளஸ் செல்கின்றனர் பத்தரை பதினொன்றிற்கு ஆலயத்தை வழிபட, கதவுகள் பூட்டப்பட்டிருக்கின்றன அமைச்சர் தரப்பினர் பரிவாரங்கள் சூழ செல்கின்றனர் மாப்பாணர் வீட்டிற்கு...அள்ளக்கைகள் உள்ளே சென்று உரப்புகின்றனர் " ஐயா வந்திருக்கிறார் கும்பிடோணுமாம் "... மாப்பாணர் பதிலளிக்கின்றார்
" பன்ரண்டு மணி பூசைக்கு கதவு திறப்பம் வேணுமெண்டால் உங்கைய்யாவை wait பண்ணி கும்பிட்டிட்டு போக சொல்லுங்கோ "...

ஆண்கள் எவராயினும் மேலாடை இன்றியே உட்செல்ல முடியுமென்னும் மாப்பாணரின் இறுக்கமான சட்டதிட்டங்களிற்கு ஏற்ப தம்மால் வணங்கிட முடியாதென மோடியே பின்வாங்கினார்...ரணில் மகிந்த என அனைவருமே அடிபணிந்தனர் ஆலய சட்டதிட்டங்களிற்கு...

மாப்பாணரின் குடும்பத்தை சேர்ந்தவரிற்கு விசேடமாக மந்திரம் ஓதி பூ வழங்கினாரென்னும் குற்றச்சாட்டில் மாப்பாணரால் ஆலயத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார் பூஜகரென்பது அண்மைய வரலாறு...

இன்றுவரையில் அர்ச்சனை பற்றுச்சீட்டு ஒரு ரூபாவாகவும், அன்பளிப்பென எவரும் பணத்தினை செலுத்த முடியாதெனவும், பொருள்களை அன்பளிப்போர் அதற்கான பராமரிப்பு செலவுகளையும் ஏற்க வேண்டுமெனவும் மாப்பாணர் இயற்றிய சட்டங்களிற்கு ஐய்யன் அலங்கார கந்தனும் ஆமா போடுகின்றான்...

மாப்பாணர் யாழ்மண்ணின் வணங்காமுடி...

அஞ்சுவதும் அடிபணிவதும் ஐய்யன் ஆறுமுகத்தானுக்கன்றி அற்பருக்கல்ல என்பது மாப்பாணரின் எண்ணம், அதுவே செயலும்...

இன்னமும் ஒரு தமிழன் வளையாது வாழ்கின்றான்...

copied


Leave a Comment