Articles

குகஸ்ரீ . குமாரதாஸ மாப்பாண முதலியாரின் குக பக்தி
--
1964ஆம் ஆண்டு தம் தமையனார் ஷண்முகதாஸ மாப்பாண முதலியாரிடம் நல்லூர் கோயில் பொறுப்பை ஏற்றவர்.
--
56 ஆண்டுகளாக நல்லூர் கோயிலை யாழ்ப்பாணத்தின் அடையாளமாக உயர்த்திப் பேணி வருபவர்.
--
இவரது அசாத்தியமான துணிவும், முருக பக்தியும், நிர்வாகத்திறனும் நினைதொறும் வியப்பூட்டும்.
--
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இவருக்கு முன் வரை நல்லூர் ஒரு பிரபலமான ஸ்தலம். இன்றோ இத்தலமே வட இலங்கையின் அடையாளம்.
--
ஆனால், அடிக்கடி போர், இடப்பெயர்வு, இன்னும் பலப்பல இடர்கள், பலப்பல அழுத்தங்கள் இவைகளை எல்லாம் சாதுரியமாக முகம் கொண்டு கோயிலை பரிபாலிப்பது இவரது திறன்.
--
ஒரு காலத்தில் இவரிடமிருந்து கோயிலை ஒரு ஆயுதக்குழு பெற முயன்றதாகவும், ஏன் ஒரு இரவு திறப்பு பெற்றே விட்டதாம், ஆனால் என்ன அதிசயமோ அடுத்த நாள் காலையில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி கூட உண்டு.
--
கோயில் மணியோசை எதற்காகவும் தடைப்படக்கூடாது என்ற கொள்கை உடையவர்.
--
ஊடகங்கள் முன் தோன்றாது, பேட்டிகள் கொடுக்காது திரை மறைவில் சரித்திரங்கள் படைப்பதே இவரது வெற்றி
--
ஆகமம் சாராத கோயில் என்றே கருதப்பட்ட நல்லூரை ஓரளவு குமாரதந்த்ர ஆகம மரபுகளுக்குள் கொண்டு வந்ததும் இவரே.
--
ஆகம/ சாஸ்திர விதிகளை நூல் பிடித்தாற் போல் கடைப்பிடிக்க இயலா விடினும், முக்கிய கிரியைகளிலேனும், கோயில் வழிபாடுகளை ஆகம/ மரபு வழி நெறிப்படுத்த வேண்டும் என்பது எனது பணிவான விண்ணப்பம்.
--
இப்பொழுது ஆயிரம் பிறை கண்ட பெருமகனாக திகழும் இவர் தம் புதல்வர் சயந்தன மாப்பாண முதலியாருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
--
சுவாமி எழுந்தருளும் போது சொல்லப்படும் கட்டியத்தில் சொல்லப்படுவது போல, .....ஜகந்நாத சுப்ரம்மண்ய பரமேஸ்வரஸ்ய பாதாரவிந்த பக்தஜநாதிரூட சோடச மஹாதான சிவகோத்ரோத்பவ குமாரதாஸ மாப்பாணர் பல்லாண்டு வாழ பிரார்த்திப்போம்.
--
அவர் வழி நல்லூர் இன்னும் எழுச்சி காணட்டும். எல்லாம் அவன் செயல் அல்லவா?
--
தியாக. மயூரகிரிக்குருக்கள்


Leave a Comment