Photos

Nallur Puthir Day 2021 |நல்லூர் புதிர்தினம் 2021

புதிர்தினம் நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை விழா இன்று (27.01.2021) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலில் உள்ள வயலுக்குச் செல்வார்கள் . அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. *இப் புதிர்தினம் 287 ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பித்தக்கது.


Leave a Comment