Articles

நல்லூர் தேவஸ்தானத்துடன் இணைந்து பணியாற்றும் திருத்தொண்டர்கள்
--
நல்லூர் பெருமானை தம் தோளில் சுமப்பதற்காக வாகனங்களின் அருகில் காத்திருக்கும் செவ்வாடை தொண்டர்களை நாம் பார்த்திருக்கிறோம்.
--
எந்த வித இலாப நோக்கமும் இன்றி, முற்று முழுதாக முருகன் பணியாக இவர்கள் செயற்படுகிறார்கள்.
--
உயர்ந்த வருமானம் பெறும் பலர், பல முக்கிய பணிகளில் உள்ள பலர், தம் வாழ்வின் பாக்கியமாக இத்தொண்டைச் செய்து வருகிறார்கள்.
--
அதிலும் பெருவிழாக் காலத்தில் விரத நியமங்களுடன் ஆசார சீலர்களாக இவர்கள் செயற்படுவது கவனத்திற்குரியதாகும்.
--
பெரும்பான்மை இளைஞர்களை கொண்ட இந்த நல்லூரானின் திருப்படையழகை காண்பதே நம் பாக்கியம்.
--
இதனை விட, நல்லூர் தேவஸ்தான நியமங்கள் பல உண்டு. மிக கண்ணியமாக, நேரம் தவறாது செயற்பட வேண்டும் என்பது அதில் முக்கியமானது.
--
அதனை இத்தொண்டர்கள் மிகச் சீராக செய்து வருவதை பார்க்கலாம். தவிரவும் தேவஸ்தான பணியாளர்களுடன் இணைந்தும், அவர்களுக்கு உறு துணையாகவும் செயற்படுவதையும் காணலாம்.
--
நல்லூர் முருகன் இத் தொண்டர்களின் பணியால், குடையழகும் நடையழகும் படையழகும் திகழ திருவீதியில் எழுந்தருள்கிறான்.
--
நல்லூர் பேராலய வாகனங்களும், பிள்ளைத்தண்டுகளும் மிகப்பாரமானவை.
--
எனவே, அதனால் ஏற்படும் உடல் வலிகளையும் சில சமயம் அவை உடலில் அழுத்துவதால் ஏற்படும் வடுக்களையும் இவ்வடியார்கள் மகிழ்வோடு ஏற்கிறார்கள்.
--
ஸ்ரீ பாதம் தாங்கிகள் என போற்றத்தக்க வகையில், செயற்படும் இவ்வடியார்களின் திருவடிகளை எம் தலை வைத்துப் போற்றுவோம்.
--
 
நன்றி தியாக. மயூரகிரிக்குருக்கள்
 
நல்லூர் தொண்டர்களின் முகநூல் இது

Leave a Comment