Photos

நல்லூர் கந்தசுவாமி கோயில் பரிபாலகர்களும் பரிபாலன காலமும்
--
1. 1ஆம் இரகுநாத மாப்பாண முதலியார் - சிற்றாலய ஸ்தாபனம் - (பொ.பி 1734- 1750)
--
2. 2ஆம் இரகுநாத மாப்பாண முதலியார்- செங்கற் கோயிலமைப்பு- (பொ.பி 1750- 1800)
--
3. 1ஆம் ஆறுமுக மாப்பாண முதலியார்- விநாயகர், பைரவர் சந்நதி அமைப்பு - (1800- 1839)
--
4. 3ஆம் இரகுநாத மாப்பாண முதலியார்- மஹோத்ஸவம் ஆரம்பித்தல்- (1839- 1860)
--
5. கந்தையா மாப்பாண முதலியார் -(1860- 1890)
--
6. சங்கரப்பிள்ளை மாப்பாண முதலியார் - (1890- 1915)
--
7. 2ஆம் ஆறுமுக மாப்பாண முதலியார்- ஷண்முகர் திருவுருவம் ஸ்தாபிக்கப்பட்டமை, உள்பிரகார திருப்பணி (1915- 1921)
--
8. 4ஆம் இரகுநாத மாப்பாண முதலியார்- முத்துக்குமார ஸ்வாமி திருவுருவ ஸ்தாபனம், ஷண்முக புஷ்கரணி திருக்குளம் அமைத்தல், (1921- 1945)
--
9. ஷண்முகதாஸ மாப்பாண முதலியார்- இராஜ கோபுரத்திருப்பணி, தற்போதைய தேர் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் (1946- 1964)
--
10. குமார தாஸ மாப்பாண முதலியார்- வடக்கு, தெற்கு ராஜ கோபுரங்கள் நிர்மாணம், தங்க விமானம் அமைக்கப்பெறல், தங்க வாகனங்கள் உருவாக்கப்பெறல் ( 1965 - இன்று வரை)
--
11. புதல்வர் சயந்தன மாப்பாண முதலியார் (தந்தையின் பணிகளுக்கு பெருந்துணை செய்கிறார்)


--
நல்லைப் பெருங்கோயில் நிமிர்வோடு திகழக்காரணமான குக பக்தி மிக்க இப்பரம்பரையினரின் ஆளுமையும் ஒரு முக்கிய காரணமாகும்.
--
இவர்கள் யாழ்ப்பாணத்தரசர்களான ஆர்ய சக்கரவர்த்திகள் காலத்தில், நகரேஷு காஞ்சியிலிருந்து இங்கு குடியேறி அரச சபையில் முக்கிய பிரதானிகளாக திகழ்ந்த மரபினர் என்றொரு கருத்து உண்டு. ஆனால், அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
--
இவர்களிடம் பரம்பரை வேலும், கந்த புராண ஏடும் ஆத்மார்த்த பூஜையில் வைத்து பாதுகாக்கப்படுவதாக ஊடகவியலாளர்- திருமதி உமாசந்திரா பிரகாஷ் எழுதிய நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
--
இவர்கள் குஹ பக்தியும் குரு பக்தியும் உடையவர்களாகவும் ஆளுமையும் ஆற்றலும் சதாசாரமும் உடையவர்களாயும் தொடர நல்லை நகர் நாயகர் அருளட்டும்


Leave a Comment