Articles

நல்லூர் தைப்பொங்கல் உற்சவம் 2015

 

 

 

அனைத்து ஷண்முகப் பெருமான் அடியார்களுக்கும் நல்லூரான் இணையத்தளம் சார்பில் இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் இவ் பொங்கல் பண்டிகையானது ஷண்முகக் கடவுளுக்கு மிகவும் முக்கியமான பண்டிகை ஆகும். நாம் அனைவரும் ஒரு சூரியனுக்கே இவ்வாறு மிகவும் விமர்சையாக பொங்கல் விழா செய்து நன்றி தெருவிக்கின்றீர்கள் என்றால் எம் ஷண்முக ஷேத்திரம் தனில் வாழும் ஷண்முகப் பெருமானை அருணகிரிநாதரோ கச்சியப்ப சுவாமிகளோ பாம்பன் சுவாமிகளோ யார் எங்கு புகழ்ந்து பாடினாலும்

“ஒருகோடி சூரியன் உதித்த பிரபை போல் கருணையால் அன்பரைக் காத்திடும் அழகும் இருகோடி சந்திரன் எழிலொட்டி யாணமும்”

என்று தான் பாடி வருந்திருக்கிறார்கள் ஒரு சூரியனுக்கே இவ்வாறு விழா எடுக்கும் போது, ஒரு கோடி சூரியனின் பிரபை போல் பூலோக கைலாயத்திலே வீற்றிருக்கும் ஷண்முகப் பெருமானுக்கு இவ் விழா எத்தனை மகத்துவம் வாய்ந்த விழா ஆகும். ஷண்முக ஷேத்திரத்திலே நாளை காலை முத்துகுமாரர் சொரூபமாயே திகழும் சூரியப்பெருமான் சப்த அஸ்வம் கொண்ட சிம்மாசனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பதை காணக்கூடியதாய் இருக்கும்.. இத்தருணத்தில் நீங்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒரு விடயத்தை கூறுகின்றேன் இவ் நல்லைக் கந்தன் ஆலயத்தில் மட்டுமே சூரியப் பெருமான் அல்லது ஷண்முகப்பெருமான் வீதிவலம் வரும் போதோ குடை பிடிக்கும் வழக்கம் இல்லை. சூரியப் பெருமான் அனல் ரூபமாய் விளங்குவதனாலும் மற்றும் ஷண்முகப் பெருமானிற்கு குடை இன்றி வீதிவலம் வருவது ஒரு கோடி சூரிய பிரபையை இந்த ஒரு சூரியனில் இருந்து வரும் ஒளி என்ன செய்து விடுமோ என எண்த்தோன்றுகிறது

சாந்தியும் சமாதானமும் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்கையை வாழ மக்கள் அனைவருக்கும் கந்தன் நல்லருள் வழங்க வேண்டும்  என நல்லூர்க் கந்தனை வேண்டி வணங்குவோமாக… உங்கள் வாழ்விலும் சாந்தியும் சமாதானம் நல்லூர்க் கந்தன் தருவார் என்பதில் ஐயம் இல்லை….  


Leave a Comment