Photos

துவஜாரோகணம்
பிரம்மோத்ஸவம் துவஜாரோகணத்துடன் துவங்குகிறது. இதனைக் கொடியேற்றம் என்று தமிழில் அழைக்கிறோம். துவஜம் என்றால் கொடி. ஆகம சாஸ்திரப்படி கோயில்களில் பிரதான வாயிலுக்கும் கருவறைக்கும் இடையே துவஜஸ்தம்பம் (கொடிமரம்) நாட்டப்பட்டிருக்கும். வருஷோத்ஸவங்கள் மற்றும் முக்கியத் திருநாட்களின் போது கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. திருநாள் துவங்கிவிட்டது என்பதற்கு இக்கொடியேற்றமே அடையாளம். வானளாவிப் பறக்கும் கொடி தெய்வங்களையும் வானவரையும் திருவிழாவிற்கு வரவேற்கும் அழைப்பிதழாகச் செயல்படுகிறது. இன்று நல்லூர் பதியிலே சஷ்டி திதியும் சுக்ல பக்ஷம் கூடிய ஆடி மாசம் 21 ம் நாள் ஸ்ரீ விகாரி ஆண்டு, கலியுகம் 5120 ஆகஸ்ட் 6 ம் திகதியுமாகிய இன்றைய நன் நாளிலே துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்ற நிகழ்வு ஆனது பூலோக நாதன் கலியுகவரதன் நல்லை நகர் இராஜதானியின் நாயகனின் ஆலயத்திலே அதிகாலை முதல் சமய சம்பிரதாய உற்சவங்கள் ஆரம்பம் ஆகி 10 மணியளவிலே 2019 ஆண்டு விகாரி வருடத்தின் 25 தின நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு ஆகிய கொடியேற்றம் இலட்சக்கண்கான சைவத்தமிழ் பக்தர்கள் புடைசூழ தேவர்கள் பூமாரி பொழிய விக்கினங்கள் தீர்கும் விக்னேஸ்வரனும் ஶ்ரீ வள்ளி தேவசேன சமேத கந்தவேள் பெருமானும் எழுந்தருளி அருள் பாலிக்க வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் பிரம்மோத்ஸவம் ஆரம்பம் ஆனது.

இங்கு நாம் நல்லுரின் சில வரலாற்று சுவடுகளை பதிவிடுகிறோம்.
இவ் ஆலயம் ஆனது 948 ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டு 1734 ம் ஆண்டு புனரத்தாரணம் செய்யப்படது. இவ் ஆலயம் பல யுகங்கள் ஆக பல்வேறு இராஜதானிகளால் போற்றி பேணப்பட்டதுடன். பல இன்னல்களையும் சில காலம் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் போர்த்துக்கேயர் சாம்ராட்சியங்களால் வீழ்த்த முன் வந்த வேளையிலும் அக்கல மன்னர்களின் துணையுடன் மாப்பண முதலியார் எனப்படும் வம்சத்தினரால் முருகனே ஒருவன் அவன் இன்றில் இவ்வுலகில் எனவனும் இல்லை என முருகனின் ஞான சக்தியை பல இன்னல்கள் கடந்தும் பார் உயர பேணி நம் கலாச்சாரத்துக்கும் ஆன்ம ஈடேற்றத்திற்கும் ஒரு ஸ்தலமாக இன்றும் என்றும் பேணி வருகிறார்கள். இவ் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகோற்சவம் என்பது தவறாது நடைபெறும் பெருவிழா ஆகும். இவ் ஆலயம் தொன்று தொட்டு அலங்கார கந்தன் ஆக பேணப்பட்டு வருவதுடன் இங்கு நேரம் தவறாமை ஒரு முக்கிய மெய் பொருள் ஆக பேணப்படுகிறது யாரிடமும் வாங்க முடியாத, யாருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னத பொருள் 'நேரம்'. “தாமதம் தவிர்த்தல் ஒரு தவம்.” உண்மையிலே இக்கால கட்டத்தில் நேர முகாமைத்துவம் என்பது மிகவும் கடினமான விடையம் என்பது அனைவரும் அறிந்ததே இருப்பினும் நித்திய நைமித்திய கிரியை களிலும் விஷேட தினங்களிலும் நேரம் ஒரு வினாடி கூட தவறாமை இங்கு தவம் ஆக நிறைவேற்றப்படுகிறது. எல்லம் நேரப்படி நடைபெறுவதனாலே என்னவோ முருகப்பெருமான் உரிய நேரத்தில் பூலோக கயிலாயத்தில் வீற்று பக்தர்களுக்கு இன் அருள் பாலிக்கின்றார் என்பதில் ஒரு ஐயப்படும் இல்லை.


Leave a Comment